அவுஸ்திரேலிய பெண் ஒருவரை சுட்டுக்கொன் த்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவில் காவல்துறை அதிகாரியாக கடமையாற்றி வந்த முகமது நூர் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வாகத்தில் வந்து கொண்டிருந்த ஜஸ்டின் ரூஸ்சைக் டாமண்ட் என்னும் அவுஸ்திரேலிய பெண்ணை ; சுட்டுக்கொன்றுள்ளார்.
குறித்த பெண் தன்னையும், தன்னுடன் இருந்தவரையும் தாக்க வருவதாக எண்ணி அவரை சுட்டுக் கொன்றதாக முகமது நூர் தெரிவித்திருந்த நிலையில் அவர்மீதான குற்றம் நீரூபிக்கப்பட்டதனையடுத்து அவருக்கு 12½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு 20 மில்லியன் டொலரகள்; இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#அவுஸ்திரேலிய பெண் #சுட்டுக் கொன்ற #அமெரிக்க #காவல்துறை அதிகாரி #சிறை