கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹொங்கொங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தியுள்ளனர்
பிரித்தானியாவின் காலனி நாடாக இருந்து வந்த ஹொங்கொங் 1997-ம் ஆண்டு சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறிய நிலையில் அது சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ளது. அதேவேளை பிரித்தானியா உள்ளிட்ட 20 நாடுகளுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ள ஹொங்கொங் சீனாவுடன் மட்டும் கைதிகள் பரிமாற்றம் குறித்ர் ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை.
கடந்த 20 ஆண்டுகளாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகின்ற நிலையில் ஹொங்கொங்கில் குற்றவியல் வழக்குகள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹொங்கொங் நிர்வாகம் முடிவு செய்தது.
இது தொடர்பாக ஹொங்கொங் சட்டசபையில் கடந்த மாதம் விவாதம் மேற்கொள்ளப்பட்ட போர் உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டதுடன் இந்த உத்தேச கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. எனினும் இது தொடர்பில் 12ம் திகதி வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டள்ள நிலையில் சட்ட திருத்தத்துக்கு எதிராக ஹொங்கொங்கில் நேற்று பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு nவீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
வெள்ளை நிற உடை அணிந்து வர்த்தகர்கள், சட்டத்தரணிகள் மாணவர்கள், ஜனநாயக ஆர்வலர்கள், மத குழுவினர் என பல தரப்பினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பல குறைபாடுள்ள சீனாவின் நீதி அமைப்பின்கீழ் ஹொங்கொங் தள்ளப்படும் நிலை உருவாவதுடன் ஹொங்காங் நீதித்துறையின் சுதந்திரம் மேலும் பாதிப்படையும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
#சட்ட திருத்தத்துக்கு #எதிர்ப்பு #ஹொங்கொங் #போராட்டம்