195
File photo
வட்டுக்கோட்டை மாவடிச் சந்தியில் உள்ள வெற்றிலைக் கடை நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமாகியது. இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09.06.19) நள்ளிரவு இடம்பெற்றது. மாவடிச் சந்தியில் வெற்றிலை வியாபாரம் இடம்பெறும் பெட்டிக்கடையே இவ்வாறு தீப் பற்றி எரிந்தது. மின்னிணைப்பு அற்ற அந்த சிறிய கடைக்கு விசமிகளால் தீவைக்கப்பட்டதா அல்லது கடைக்குள் தீ விபத்து இடம்பெற்றதா ? என்ற தகவல் கிடைக்கவில்லை. #வட்டுக்கோட்டை #மாவடிச்சந்தி #தீவிபத்து
Spread the love