Home இலங்கை இலங்கையின் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் – எச்சரிக்கை விடுக்கப்பட்டது..

இலங்கையின் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் – எச்சரிக்கை விடுக்கப்பட்டது..

by admin


இலங்கையில் மழையுடன் கூடிய வானிலை காரணமாக சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மண்சரிவு மற்றும் கற்பாறை சரிந்துவிழும் அபாயம் நிலவுவதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நிறுவகத்தின் மண்சரிவு ஆராய்ச்சிப் பிரிவின் சிரேஷ்ட புவியியலாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், அது தொடர்பில் வெளியிடப்படும் அறிக்கைக்கு இணங்க செயற்படுமாறு பொதுமக்களை அறிவுறுத்துவதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் நிலவும் காற்றுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. #இலங்கை #மழையுடன் கூடியவானிலை #தேசியகட்டடஆராய்ச்சி நிறுவகம் #Landslide

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More