பெங்களூரு சிறைச்சாலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள சசிகலாவை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுப்பது குறித்து கர்நாடக அரசுக்கு அம்மாநில சிறைத்துறை பரிந்துரை செய்துள்ளதாக ;ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் சசிகலாவை ஓராண்டுக்கு முன்பே அல்லது இந்த ஆண்டு இறுதியில் விடுவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 4 பேரும் மனு தாக்கல் செய்ததனையடுத்து நால்வரும் விடுவிக்கப்பட்டதனையடுத்து அதனை எதிர்த்து உச்சநீதிமனறத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த கொண்டு இருந்த போதே முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு உயிரிழந்திருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பினை 2017 ஆண்டு பெப்பரவரி வழங்கிய உச்சநீதின்றம் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்ததையடுத்து 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
#நன்னடத்தை #சசிகலா #சிறைத்துறை #பரிந்துரை