வடகொரியாவில் ராணுவ புரட்சி நடத்த முயன்ற ராணுவ தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு அவர் பிரானா மீன்களுக்கு இரையாக்கப்பட்டுள்ளதாக மேற்கத்தேய ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.
சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகின்ற வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தனக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதனை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் இதுவரை அரசில் உயர் பதவி வகிக்கும் 16 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் ராணுவ புரட்சி நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில், வடகொரிய ராணுவ தளபதி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த ராணுவ தளபதியின் பெயர் வெளியிடப்படாதநிலையில் கிம் ஜாங் உன் தனது வீட்டில் வைத்திருக்கும் பிரமாண்டமான பிரானா மீன் தொட்டியில் அந்த ராணுவத் தளபதி தூக்கி வீசப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மேற்கத்தேய ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன. #ராணுவத்தளபதி #வடகொரியா #கிம்ஜாங் உன்