வயதான பெற்றோரை கவனிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு சிறைத் தண்டனை வழங்குவதற்கு பீகார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சிலர் பெற்றோரின் அடிப்படை தேவைகளை கூட செய்யாமல், அனாதைகளாக தவிக்க விடுகின்ற நிலையில் இவ்வாறு வயதான பெற்றோரை முறையாக கவனிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு சிறைத் தண்டனை வழங்குவதற்கு பீகார் அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்;பெற்றால், பிள்ளைகள் மீது பிணையில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
#வயதான பெற்றோரை #கைவிடும் பிள்ளைகளுக்கு #சிறை #பீகார் #அமைச்சரவை