ஹற்றன் – தரவலை கீழ்ப்பிரிவு தோட்டத்தில் கடந்த (06) வியாளக்கிழமை இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு இடையில் அடிதடிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அன்றைய தினம் மாலை 5 மணியளவில் குறித்த தோட்டத்தில் வீதியில் நின்ற இளைஞர்களை அவ்வழியாகச் சென்ற சிறுவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து இரு தரப்பினரும் பதிலுக்கு கற்களை கொண்டு தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.
இதன்போது, கல் ஒன்றினால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் அதே இடத்தில் சுறுண்டு வீழ்ந்துள்ளார். இந்த மோதலின் போது (25, 27) வயதுடைய இளைஞர்கள் இருவர் காயமடைந்திருந்தனர். இவர்களில் ஒருவர் கண்டி வைத்தியசாலையிலும் மற்றையவர் கிளங்கன் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு இப்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை 12 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கிரிக்கெட் போட்டி ஒன்றினால் ஏற்பட்ட சிறிய முரண்பாட்டின் பின்னணியிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, மோதலில் ஈடுபட்ட சிறுவர்கள் சரியாகப் பாடசாலைக்குச் செல்வதில்லை என்றும், இவ்வாறு வன்முறைச் செல்வதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பிலான சிசிடிவி காணொளியில் சிறுவர்களின் திசைமாறிப் பயணிக்க முயற்சிப்பது மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை வெறும் முரண்பாட்டு வன்முறையாக மட்டும் கருதாமல் இச்சிறுவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்கக் கூடிய சரியான நடவடிக்கையைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
G.Pragas