எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட தெரிவுக் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளான ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கு எதிராக 27 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக காவற்துறைத் தலைமையகம் அறிவித்துள்ளது. முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக கடந்த 4 ஆம் திகதி அமைக்கப்பட்ட குழுவிடம் முறைப்பாடுகளைக் கையளிக்கும் நடவடிக்கை நேற்று மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றது. சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் தலைமையில் இந்த முறைப்பாடுகள் பொறுப்பேற்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக 12 முறைப்பாடுகளும், அசாத் சாலிக்கு எதிராக 5 முறைப்பாடுகளும், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 2 முறைப்பாடுகளும் இவர்கள் மூவருக்கு எதிராக 8 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகள் அனைத்தும் மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. #தெரிவுக்குழுக்கூட்டம் #ஹிஸ்புல்லா #அசாத்சாலி, #ரிசாத்பதியுதீன்
செவ்வாய்க்கிழமை மீண்டும் தெரிவுக்குழு கூடுகிறது…
163
Spread the love