யாழ் மாவட்ட புதிய காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (14) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது யாழ் மாவட்டத்திலும் வடமாகாணத்திலும் சட்டவிரோதமாக செயற்பட்டுவரும் சமூக விரோத குழுக்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் காவல்துறை அத்தியட்சகரிடம் கேட்டுக்கொண்டதுடன் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை வடமாகாணத்தின் புதிய கடற்படை கட்டளைத் தளபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் கபில சமரவீரவிளை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்திருந்தார் இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் கடற்படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை மீண்டும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்
மேலும் காங்கேசன்துறை பிரதேசத்தில் கடற்படையினரின் வசமுள்ள நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு சொந்தமான புனித பூமி மற்றும் மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்தும் புதிய கடற்படை கட்டளை தளபதியுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
#சமூக விரோத குழுக்களை #கட்டுப்படுத்துமாறு #காவல்துறை அத்தியட்சகரிடம் #ஆளுநர்