158
யாழ்ப்பாணம் நகா் பகுதியை அண்டிய பகுதியில் உள்ள சிறுத்தீவுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சி4 ரக வெடிமருந்து உட்பட அபாயகரமான வெடிபொருள்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர்; மற்றும் இராணுவத்தினா் இணைந்து குறித்த பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட வெடி பொருள் தொடர்பில் காவல்துறையினர்; தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ் – சிறுத்தீவுப் பகுதியில் அபாயகரமான வெடிபொருள்கள் மீட்பு#யாழ் #சிறுத்தீவுப் பகுதி #அபாயகரமான #வெடிபொருள்கள்
Spread the love