166
சாகித்ய அகாடமி வழங்கும் யுவபுரஸ்கார் மற்றும் பால யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதை வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான யுவபுரஸ்கார் விருது வால் கவிதைத் தொகுப்புக்காக கவிஞர் சபரிநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது `வால்’ கவிதைத் தொகுப்பின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் சபரிநாதன். கோவில்பட்டியைச் சேர்ந்தவர். தமிழ் நவீனக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.
இதேவேளை பால யுவ புரஸ்கார் விருது மறைந்த எழுத்தாளர் அழ.வள்ளியப்பாவின் மகளும், எழுத்தாளருமான தேவி நாச்சியப்பனுக்கு வழங்கப்படுகிறது. தற்போது முதுகலைத் தமிழாசிரியையாகப் பணிபுரிந்துவரும் இவர். தனது 22ஆவது வயதில் கோகுலம் இதழில் குழந்தைகளுக்காக எழுதத் தொடங்கியவர். சிறார் இலக்கியத்துறை தொடர்பில் இவர் 12 நூல்கள் எழுதியுள்ளார்.
#தமிழக கவிஞர் #சபரிநாதனுக்கு #இந்திய சாகித்ய அகாடமி #யுவ புரஸ்கார் விருது :
Spread the love