விளம்பர தூதுராக இருக்க ஒப்பந்தம் செய்த தொகையை கொடுக்க தவறியதற்காக அவுஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் விளையாட்டு சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் மீது சச்சின் தெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஸ்பார்ட்டன் ஸ்போர்ட்ஸ் எனும் நிறுவனம் மீதே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது
இந்த நிறுவனம் தயாரிக்கும் துடுப்பாட்ட மட்டைகளில் சச்சின் தெண்டுல்கரின் பெயரையும் புகைப்படங்களையும் பயன்படுத்தி விளம்பரம் செய்து அவர்களது தயாரிப்புகளை சச்சின் பை ஸ்பார்ட்டன் என விற்பனை செய்வதற்கு ஆண்டுக்கு 10 லட்சம் டொலர்கள் தருவதாக கடந்த 2016-ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
எனினும் ஒப்பந்தம் செய்தவாறு தொகையை தராமல் உள்ளமதாக தெரிவித்துள்ள சச்சின் ஸ்பார்டான் நிறுவனம் இனி தனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்த கூடாது என கடந்த ஆண்டே தெரிவித்து விட்டுள்ளார். இந்தநிலையில் முன்னர் பேசியபடி தனக்கு சேர வேண்டிய 30 லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்காத அந்நிறுவனத்தின் மீது சிட்னி நீதிமன்றத்தில் சச்சின் தெண்டுல்கர் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.
#அவுஸ்திரேலிய நிறுவனம் #சச்சின் தெண்டுல்கர் #வழக்கு