அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரும், ஜனாதிபதி டிரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளருமான சாரா சாண்டர்ஸ் பதவிவிலகியுள்ளார். இந்த தகவலை ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் பதவியை வகிக்கும் 3-வது பெண்ணான சாரா சாண்டர்ஸ் மிக கவுரவமிக்க இந்த பதவியை வகிக்கும் 3-வது பெண் இவர் ஆவார். ஜனாதிபதி டிரம்பின் நம்பிக்கைக்குரியவரான இவர், டிரம்ப் ஜனாதிபதி ஆக வேண்டும் என கடவுளே விரும்புகிறார் எனத் தெரிவித்ததன் மூலம் அனைவரது கவனத்தினையும் பெற்றிருந்தார்.
இந்த நிலையில தற்போது அவர் பதவிலகியுள்ளார். இந்த தகவலை டுவிட்டரில் தெரிவித்துள்ள டிரம்ப் 3½ ஆண்டுகளாக சிறப்பான பணிக்கு பின்னர் சாரா சாண்டர்ஸ் இந்த மாத இறுதியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறார். சாரா அற்புதமான திறமைகளுடன் கூடிய மிக சிறப்பான நபர். அவர் சிறப்பான பல பணிகளை செய்திருக்கிறார். நன்றி சாரா என தெரிவித்துள்ளார்.
இதேNவேளை தனக்கு வழங்கப்பட்ட பணி தன் வாழ் நாள் முழுவதும் தனக்கு வழங்கப்பட்ட கௌரவம் எனவும் தான் தற்போது தனது குழந்தைகளுடன் இருப்பதில் ஆர்வமாக இருப்பதாகவும் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். #அமெரிக்கா#டிரம்ப் #வெள்ளைமாளிகை #சாராசாண்டர்ஸ்