திறன்பேசி பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டுவதற்காக முகப்புத்தக நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள ஸ்டடி எனும் செயலியை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுக்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது
அன்ட்ரய்ட், ஐஓஎஸ்ம் விண்டோஸ் என எவ்வித பாரபட்சமுமின்றி, அனைத்து இயங்குதளங்களின் தயாரிப்பு நிறுவனங்களின் வாயிலாகவும், செயலிகள் வாயிலாகவும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலேயே பெறப்பட்டு வருவதாக நீண்டகாலமாக குற்றம்சுமத்தப்பட்டு வருகின்றது
இந்தநிலையில் முகப்புத்தக நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் ஸ்டடி எனும் இந்த செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அதனைப் பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுக்க உள்ளதாகவும் அந்நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவின் மேலாளர் தெரிவித்துள்ளார்
இந்தநிலையில் இதுவரைகாலமும் சட்டப்பூர்வமற்ற வழிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயனர்களின் தனிப்பட்ட தரவு திரட்டலை தற்போது முகப்புத்தக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #திறன்பேசி #முகப்புத்தகநிறுவனம் #அன்ட்ரய்ட் #ஐஓஎஸ்ம்விண்டோஸ்