ஈஸ்ட்டர் 2019 தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன்…
இலங்கையில் இனத்துவ உறவுகளில் சிங்களவர் முஸ்லிம்கள் உறவும் தமிழர் முஸ்லிம்களின் உறவும் பற்றிய உரையாடல்களின் போக்கை ஈஸ்ட்டர் 2019 அடியோடு மாற்றிவிட்டது. இதுபற்றிய உரையாடல்கள் சிங்களவர் மத்திலும் இலங்கை தொடர்பாக ஆர்வமுள்ள சர்வதேச சமூகங்கள் மத்தியிலும் தீவிரப்படுள்ளது. எனினும் முஸ்லிம்கள் மத்தியில் பெரிதாக உரையாடல்களும் ஆய்வுகளும் இடம்பெறவில்லை என்பது அதிற்ச்சி தருகிறது.
.
ஈஸ்டர் தாக்குதலின் முன் பின் என இலங்கையின் இன சமன்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர் நிலவும் சூழல்கள் இலங்கையில் வடகிழகில் மட்டும்தான் ஒப்பீட்டுரீதியாக தமிழர்களும் முஸ்லிம்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை உணர்த்தியுள்ளது. இதற்க்கு தமிழ் மொழிதான் காரணம். எனினும் தமிழரும் முஸ்லிம்களும் இதனைக் கோட்பாட்டு ரீதியாக புரிந்துகொள்வோ உணரவோ இல்லை. இத்தகைய சூழல் மலையக தமிழ் பகுதிகளிலும் காணப்படுகிறது. சிங்கள பகுதிகளில் முஸ்லிம்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ளபகுதிகளாக ஈஸ்ட்டர் 2019 தாக்குதல்கள் வரைக்கும் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழ்கிற பகுதிகள் இருந்தது. இன்றைய நிலை பற்றி உறுதிசெய்ய போதிய தரவுகள் இல்லை.
.
அண்மைக்கால வரலாற்றில் முஸ்லிம்கள் மத்தியில் இடம்பெற்ற மதவிவாதங்களும் மாற்றங்கள் சிங்களவரதும் தமிழரதும் கவனத்தை ஈர்த்தபோதும்
குறிப்பாக போர் முடியும்வரைக்கும் அவை முஸ்லிம்களின் உள் இனபிரசினையாகவே கருதப்பட்டது. போருக்குபின் நிலமை முற்றாக மாற்றமடைந்துள்ளது. எனினும் ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர்தான் முஸ்லிம்களின் உள் மத விவாதங்களில் நிலவும் மோதல்கள் உள்விவகாரமல்ல அது அரேபிய மையவாத மத அணிகளின் பயங்கரவாத அச்சுறுத்தல்களின் ஊற்று என புலனாய்வுத் தகவல்கள் அடிபடையில் சிங்கள தேசியவாத தரப்பால் அடையாளபடுத்தபட்டது. சிங்கள தரப்பும் அயல்நாடுகளும் மிகத் தெளிவாக வஹாபிய சார்பு அமைப்புகளை குற்றம் சாட்டுகின்றன. இதன் அடிப்படையில் சர்வதேச அச்சுறுத்தல் உள்ளதாக உணரப்பட்டு இலங்கைக்கு வெளியில் தென் இந்தியாவிலும் தேடல்கள் விசாரணைகள் இடம்பெறுகின்றது. மேலும் குற்றவாளிகள் சிலர் அரபு நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். . உண்மையில் இந்த அரபிய மையவாத அணிகள் மீதான எதிர்ப்பே அரபு மொழி, அரபு ஆடைகள் என்பவற்றின் மீதான எதிர்ப்பாக உருமாற்றம் பெற்று வருகின்றது.
.
சிங்கள பெளத்த மத நிறுவனங்களும் சிங்கள தேசிய வாத அறிஞர்களும் ஆர்வலர்களும் மிக தெளிவாக வஹாபிய அமைப்புகளுக்கு எதிரான சமரசமற்ற நிலைபாட்டை எடுத்துள்ளனர். குற்றச் சாட்டுக்கள் யாவும் வகாபிகளின் தலையில் கட்டபடுகிறது. சிங்களவர் தெளிவாவாக இனி சூபிகளோடு மட்டுமே சமரசம் என்கிற நிலைபட்டை எடுத்துள்ளனர். இந்தச் சூழல் கிழக்கு தமிழரை ஏற்கனவே பாதிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த போக்கு கடல் கடந்து இந்தியாவையும் பாதிக்கலாம்.
.
எதிர்காலத்தில் முஸ்லிம்களுடனான சிங்களவர்களதும் தமிழரதும் உறவுகளும் நிலைபாடுகளும் சூபிஅமைப்புகளூடாகவே தீர்மானமாகும் என்பது மிக தெளிவாக தெரிகிறது. சூபிகளா வகாபிகளா என்கிற விவாதம் முஸ்லிகளின் உள்விவகாரம் என்பதுதான் இக் கட்டுரையாளரின் நிலைபாடு. ஆனால் இலங்கையில் முஸ்லிம்களுக்கு வெளியே என்போல சிந்திக்கிற பலர் இருப்பதாக தெரியவில்லை.
.
போருக்குப்பின் என்னை ஆச்சரியபடுத்திய விடயம் முஸ்லிம்களுக்கு வெளியில் முஸ்லிம்கள் பற்றிய பெரும் விவிவாதங்கள் ஆரம்பமானதுதான். பொதுவாக நான் சந்திக்கும் சிங்களவர் பலர் முஸ்லிம்கள் பற்றிய நம்ப முடியாத அளவுக்கு பரந்த வாசிப்பையும் தரவுகளையும் புலனாய்வுத் தகவல்களையும் கொண்டிருக்கிறார்கள். இது புதிய சூழல் அல்ல, சிங்கள ஏடுகளையும் ஆங்கிலத்தில் தி ஐலண்ட் வார இதழ்களையும் வாசிக்கும் ஒருவர் இலங்கையில் 2014ன் பிரபலமான விவாதமாக வகாபிய ஆபத்துப் பற்றிய விவாதம் இருந்ததை அறிந்து கொள்ள முடியும். இதனால்தான் ஈஸ்ட்டர் தாக்குதலின்பின்னர் “எங்களுக்கு எதுவுமே தெரியாது” என்கிற முஸ்லிம்களின் உரையாடலை சிங்கள தரப்புகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் போருக்குப்பின்னர் முஸ்லிம்களைப்பற்றிய மதம்சாராத முக்கிய விவாதங்கள் தேடல்கள் எதுவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் இடம்பெறவில்லை என்கிற அவலத்தை அபத்தத்தை என்போன்ற ஒருசிலர்தான் சிலர்தான் அறிவார்கள். “ஒட்டகத்தைக் கட்டிவிட்டு இறைவன்மீது நம்பிக்கை வையுங்கள்” என்று எழுதபட்டுள்ளதல்லவா? ஏன் முஸ்லிம்கள் மத்தியில் ஒட்டகத்தை கட்டுவது பற்றிய சமூக பொருளாதார அரசியல் விவாதங்கள் முதன்மை பெறவில்லை என்பது ஆச்சரியம் தருகிறது. சிங்களவர் மத்தியில் இடம்பெறும் விவாதங்கள் ஆய்வுகள் அள்வுக்குக்கூட முஸ்லிம்கள் மத்தியில் தம்மைப் பற்றிய உரையாடல் இல்லையென்பதை என்னால் நம்ப முடியவில்லை.
புதிய சூழலில் 1987ல் தமிழ் இனபிரச்சினை தீர்வுக்கு அடிப்படையாக இந்தியாவால் முன்வைக்கபட்டு புலிகளால் தடைப்பட்ட வடகிழக்கு இணைப்பு பற்றிய உரையாடல் மீண்டும் ஆரம்பித்துள்ளது. புத்த பிக்குகள் சிலரே இத்தகைய கருத்துகளை பேசுவதுதான் காலத்தின் கோலம்.
.
சூபிசம் அல்ல வஹாபிசமே அண்மையில் நிகழ்ந்த ஈஸ்ட்டர் 2019 பயங்கரவாதத்தின் ஊற்று என்பதே அரசு மட்டம்வரைக்கும் சிங்களவர் மத்தியில் உள்ள தீர்மானமாக உள்ளது. வஹாபிசத்துடன் எவ்வித சரசமும் இல்லை என்கிற சிங்களவர்களின் நிலைபாடு கிழக்கிலும் பாதிக்கபட்ட மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இவற்றை மறுக்கிறீங்களா? தலைபோககிற இந்த பிரச்சினை பற்றி எவ்வித உரையாடலும் இன்றைய காலத்தின் சிக்கலை எப்படி எதிர்நோக்குவது?
.
கோட்பாட்டு ரீதியாக இன்று சிங்கள தேசிய வாதிகள் புத்தபிக்குகள் அரசியல்வாதிகள் மத்தியில் முதன்மை பெற்றுள்ள விவாதங்களை நிலைபாட்டைபற்றியே இங்கு பேசுகிறேன். இந்த விவாதங்கள் சர்வதேசத்தையும் தமீழர்களையும் வெகுவாகப் பாதிக்கிறது. இலங்கையில் இடபெறும் முஸ்லிம்கள் மீதான எல்லா தாக்குதல் களுக்கும் அரச நடவடிக்கைகளுக்கும் இந்த விவாதங்களே காரணமாக இருக்கிறது. நான் சொல்வது தவறெனில் அதுபற்றியாவது விவாதியுங்கள்.
முஸ்லிம்கள் எந்த முடிவை எத்தாலும் என்னைப்போன்ற வர்களின் ஆதரவு நிச்சயமாக இருக்கும். முஸ்லிம்கள் சரியான முடிவுகளை எடுத்தால் மட்டுமே எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும். #உயிர்த்தஞாயிறுதாக்குதல்#சிங்களவர்முஸ்லிம்கள்# #தமிழர்சர்வதேசசமூகங்கள் #வஐசஜெயபாலன்