Home இலங்கை செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…

செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…

by admin

அமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் செம்மை நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் இரு தரப்பினரும் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரைக்கு அனுராதபுரம் பகுதியிலிருந்து மூன்று பேருந்துகளில் பெரும்பான்மையின மக்கள் அழைத்துவரப்பட்டட்டுள்ளனர்.

பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் மற்றும் மூன்று பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் இன்றையதினம் பொசன் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் தேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில் 5 க்கும் மேற்பட்ட பிக்குகள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் இந்த வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளனர்.

அழைத்து வரப்பட்ட மக்கள் மத்தியில் பேசிய தேரர்கள் இங்கே, பிள்ளையார் ஆலயம் முன்னர் இல்லை என்றும் இப்போதே அமைக்கப்பட்டுள்ளதாகவும் குருகந்த ரஜமஹா விகாரை என்ற விகாரையே பல ஆண்டுகளாக இருந்ததாகவும் ஆனால் இப்போது அந்த விகாரையில் வழிபட முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாவும் பொய்யான தகவல்களை தெரிவித்தனர்.

இந்த சர்சைக்குரிய ஆலயப்பகுதியில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு மாவடட நீதிமன்று கடந்த மே மாதம் 6 ஆம் திகதி தீர்ப்பு வழங்கபட்டுள்ள நிலையில் இரண்டாவது தடவையாகவும் பௌத்த பிக்குகளால் சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு இனவாத கருத்துக்கள் பௌத்த பிக்குகள் போதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

1 comment

Karunaivel - Ranjithkumar June 16, 2019 - 1:04 pm

In fact all these unnecessary en-devours made another rift as well havoc in our mother nation of Sri Lanka. Though these religious dignitaries act as well so call radicalized Muslim ex Governor cum leaders statement seems equal in terms of hood wink those innocent public at large. Where he made his statement over parliamentary select committee that for the sake of hravesting votes he made such alleged speeches over public during past as well joined hand with those rdicalised Islam faction. Like wise these Theroes doing this in fact more over is it that Anuradhapurs those who ever taking for a ride here will come back and lives in these crouched area???? More over if any battle starts over is that any public lives here like those days most of those general innocent public left their land as well belongings and just made across those seas and lives in such un familiar lands in europe. Do we again wants to make that happen???? May God bless mother Sri Lanka.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More