இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரில், நேற்று முன்தினம் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியைத் தொடர்ந்து தனது ஊடகக் கடமைகளை புறக்கணித்த இலங்கை அணி தடையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆடுகளங்கள், பயிற்சி வசதிகள், போக்குவரத்து வசதிகள், இருப்பிட வசதிகளின் தரத்தை இலங்கையின் அணி முகாமையாளர் அசந்த டி மெல் விமர்சித்த சில நாட்களிலேயே மேற்குறித்த புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவிடம் 87 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
#ஊடகக் கடமை #இலங்கை கிரிக்கெட் அணி ,தடை #உலகக் கிண்ணம்