நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாஸ்டர்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற சிறிய ரக விமானம் ஒன்றும் மற்றுமொரு விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் விமானங்களின் இரண்டு விமானிகளும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
நேற்றையதினம் நடைபெற்ற இந்த விபத்தின் போது விமானங்கள் இரண்டும் மோதியதும் விமானங்கள் இரண்டும் தீப்பற்றியுள்ளதாகவும் விபத்து இடம்பெறும் போது 2 விமானங்களிலும் விமானிகள் மாத்திரமே இருந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியவில்லை என்பதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
#நியூசிலாந்தில் #விமானங்கள் #விபத்து , #New Zealand