சோமாலியாவில் ஜனாதிபதி மாளிகை அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .சோமாலியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற அல்-கொய்தாவின் ஆதரவுபெற்ற அல்-ஷபாப் அமைப்பினர்; அங்கு காவல்துறையினர் , இராணுவத்தினர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தலைநகர் மொகாதீசுவில் ஜனாதிபதி; மாளிகைக்கு அருகே உள்ள காவல்துறை சோதனை சாவடியில் காவல்துறையினர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதச் செய்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாகி எனவும் குண்டுவெடிப்பில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 25 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரத்துக்குள்ளாக மொகாதீசுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் வீதியில்; மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்குறித்தகுறித்த இரட்டை கார் குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கும் அல்-ஷபாப் அமைப்பினர் பொறுப்பு ஏற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
#சோமாலியா #ஜனாதிபதி மாளிகை #குண்டுவெடிப்பு #பலி