ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (18.06.19) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் மூவர் குறித்து, முக்கியமாகக் கலந்துரையாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (17.06.19) மாலை நடைபெற்ற கூட்டத்தின் போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அமைச்சரவைக் கூட்டம், இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு ஆதரவளிக்கும் முகமாக, அமைச்சர்களாக இருந்த ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஸிம், ரிஷாட் பதியூதீன், அப்துல் ஹலீம் ஆகியோர், கடந்த 3ஆம் திகதியன்று, தத்ததமது பதவிகளில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது. #மைத்திரிபாலசிறிசேன #அலரிமாளிகை #ரணில்விக்கிரமசிங்க #ரவூப்ஹக்கீம் #கபீர்ஹாஸிம் #ரிஷாட்பதியூதீன்