169
இலங்கையின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், அமைச்சரவை கூட்டப்படாதென ஜனாதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டதுடன் கடந்த வாரம் அமைச்சரவை கூட்டமும் இடம்பெற்றிருக்கவில்லை. எனினும் இன்றும் விசேட தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள நிலையில், அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. #அமைச்சரவைக்கூட்டம் #மைத்திரிபாலசிறிசேன #ஜனாதிபதிசெயலகம் #விசேடதெரிவுக்குழு
Spread the love