இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி தம்மிடம் இருந்து பறிபோன அதிகாரங்களை மீள பெற்றுக் கொள்ள அடிப்படைவாத அரசியல் குழுக்கள் முயற்சிப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார். இதற்கொரு போதும் இடமளிக்க முடியாது என்றும் ஒரு இனத்தவர் அடிப்படைவாதியாக செயற்பட்டால் அதன் விளைவு ஒட்டுமொத்த இனத்திற்கும் தாக்கம் செலுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ என்ற செயற்திட்டத்தின் கீழ் குருநாகலை சாஹிரா பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி தொழினுட்ப கட்டட திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, இன, மத, மொழி அடிப்படையில் பிளவுப்பட்டு முரண்பட்டுக் கொண்டிருந்தால் ஒருபோதும் நாடு முன்னேற்றமடையாது என்றும் இலங்கையர் என்ற நிலையில் இருந்துக் கொண்டு அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நாட்டுக்கு முன்னுரிமை கொடுத்தல் அனைவரினதும் பொது உரிமை , அரசியல் தொடர்பிலான தீர்மானங்களை முன்னெடுப்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை என்றும் அவர் அங்கு மேலும் கூறினார்.
#இனவாதம் #மதவாதம் #அதிகாரத்தை #அகில விராஜ்