156
அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய கபீர் ஹாசீம் மற்றும் M.H.A. ஹலீம் ஆகியோர் மீண்டும் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். கபீர் ஹாசீம் ஏற்கனவே பதவி வகித்த பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சுப் பொறுப்பையும் எம்.எச்.ஏ. ஹலீம் தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சுப் பொறுப்பையும் மீண்டும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் அவர்கள் இன்று தமது பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டனர். #கபீர்ஹாசீம் #ஹலீம்
Spread the love