Home இலங்கை கல்மடு ரங்கன்குடியிருப்பு மக்கள் யானைக்கு எதிராக அரச அதிபரிடம் மகஜர்

கல்மடு ரங்கன்குடியிருப்பு மக்கள் யானைக்கு எதிராக அரச அதிபரிடம் மகஜர்

by admin

கிளிநொச்சி கண்டாவளை ரங்கன்குடியிருப்பு மக்கள் காட்டு யானைகளின் பாதிப்புக்களிலிருந்து தங்களை பாதுகாக்குமாறு கோரி கிளிநொச்சி அரச அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.இன்று(19) காலை பத்து மணிக்கு மேற்படி குடியிருப்பு மக்கள் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு சென்ற மக்கள் அங்கு பிரதேச செயலாளரிடம் தங்களின் பிரச்சினைகளை கூறியிருந்தனர். பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு காட்டு யானைகளின் அழிக்கப்பட்ட பயிர்களின் எச்சங்களுடன் வருகைதந்த மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டதோடு, மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை கடிதத்தையும் வழங்கியிருந்தனர்.

தங்களின் குடியிருப்புக்களுக்கு காட்டு யானைகள் தொடர்ந்தும் உள் நுழைந்து வான் பயிர்கள் உள்ளிட்ட பயிர்களை அழித்து வருவதோடு, வீடுகளுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அண்மைய நாட்களில் தினமும் யானையின் அச்சம் நிலவி வருகிறது. எனவே இது தொடர்பில் நாங்கள் பலரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது எவரும் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவித்த ரங்கன்குடியிருப்பு மக்கள்

யானைகள் கிராமத்திற்குள் உட்பிரவேசிக்காத வகையில் மின்சார வேலிகள் அமைத்து உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்து தருமாறு கோருகி்ன்றனர்.

இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கருத்து தெரிவிக்கையில்

உடனடியாக செய்ய வேண்டிய தீர்வு, நிரந்தர தீர்வு தொடர்பில் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள் உதவிப் பணிப்பாளாருடன் கலந்தாலாசித்துள்ளோம் , அந்த வகையில் முதற்கட்ட நடவடிக்கையாக கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு எல்லைகளில் யானைகளை கிராமத்திற்குள் உட்பிரவேசிக்காத வகையில் வனஜீவராசிகள் திணைக்கள் ஊழியர்களுடன் பொது மக்களும் இணைந்து கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுப்படுவார்கள்.

இரண்டாம் கட்டமாக நிரந்தர தீர்வாக மின்சார வேலி அமைத்தல் பணி தொடர்பில் ஆராய்ந்துள்ளோம், கல்மடுநகர் தொடக்கம் இரணைமடுவரை குறித்த வேலி அமைக்கும் பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

#கல்மடு   #யானைக்கு #அரச அதிபரிடம் #,சுந்தரம் அருமைநாயகம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More