அரசியல் செயற்பாட்டில் யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை – எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவிப்பு:-
அர சியல் செயற்பாடுகளில் வேலை செய்யும் போது யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருதவேண்டியதில்லை. மக்கள் நலனில் குறிக்கோளாக இருங்கள், என எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவித்தார்
ஜெசாக் நிறுவனமானது USAID-SDGAP நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் பெண்களை அரசியலில் பங்காளிகளாக்குகின்ற செயற்பாட்டில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க செய்தல், தொடர்பான செயலமர்வுகள் , பயிற்சிப் பட்டறைகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கம் வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்று வந்தது. இச்செயற் திட்டத்தின் மீளாய்வும் எதிர்கால செயற்பாடுகளும் குறித்த கலந்துரையாடல் சமூக செயட்பாட்டு மையத்தின் இணைப்பாளர். நடராஜா சுகிர்தராஜ் தலைமையில் யாழ்ப்பாணம் அலுவலக மண்டபத்தில் நேற்று [19.06.2019 ] காலை தொடக்கம் மாலை வரை இடம்பெற்றது. இச் செயற்பாட்டில் பங்கு கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரு பெண்மணி நகரசபை தேர்தலில் போட்டியிட தீர்மானித்தார். நிறைய செயற் பாட்டில் ஈடு பட்டார் . ஆனால் அவரிடம் எந்தவிதமான நிதி வசதியும் இல்லை. மக்களுக்கு சேவை செய்வதில் விருப்பம் இருந்தது, . அந்த பெண் நினைத்தார் தன்னுடைய வேலைகள் மூலம் கட் டாயம் தனக்கு அரசியல் பிரதி நிதித்துவம் கிடைக்கும் என்று , அங்குள்ள ஏனைய கட் சிகளின் உறுப்பினர்களை விட சிறப்பாக செயற்பட்டார் . ஆனால் அந்தப் பெண்ணிற்கு இடம் கிடைக்கவில்லை, அவரது கட் சி ஒத்துழைப்பு வழங்கவில்லை, மக்களுக்காக நிறைய நம்பிக்கையுடன் சேவை செய்தார். கட்சியில் எதிர்ப்பு இருந்தாலும் மக்கள் நலனுக்காக போராடி தேர்தலில் நின்றார் . எனவே இப்படி அரசியல் செயற்பாடுகளில் வேலை செய்யும் போது யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருதவேண்டியதில்லை. மக்கள் நலனில் குறிக்கோளாக இருங்கள், உங்களின் சக்தி ஆளுமைகளை பார்க்கும் போது உற்சாகமாக உள்ளீர்கள் என்பது தெரிகிறது.
நீங்கள் செய்யும் சேவை இந்த நாட்டின் ஜனாதிபதி , பிரதம மந்திரி வெளிநாட்டிற்கு சென்று யாரை சந்தித்தாலும் அவர்கள் செய்யும் கடமைகளை விட பெரியது. அடி மட்ட மக்களின் பிராச்சனைகளை வெளிக்கொண்டு வரும் செயற்பாடுகளில் பெண்களாகிய உங்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. அதனால் நீங்கள் தீவிரமாக செயற்படுகின்றீர்கள். என்றார்.
மேலும் இக் கலந்துரையாடலில் எஸ் டி கப் நிறுவனத்தின் மீளாய்வு ம் அறிக்கையிடலும் அதிகாரி ஜி . கஜனின் நெறிப்படுத்தலில் வடக்கில் பயிற்சி பெற்ற 125 பெண்களில் தெரிவு செய்யப்பட 25 பெண்கள் பங்கு பற்றி தமது கிராமங்களில் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டனர் என்றும் , அவற்றில் எதிர்கொண்ட சவால்கள், தீர்வுகளும் ., எதிர்கால திட்ட்ங்கள் குறித்தும் விவாதிக்கப் பட்டன.
குறிப்பாக. எந்த அரசியல் கட்சியினதும் அடையாளமின்றி பெண்கள் என்ற வகையில் ஒவ்வொரு கிராமங்களிலும் தங்களை அடையாளப் படுத்துவதிலும் , கட் சி சார் அதிகாரங்களின் இடையூறுகள் , இனந்தெரியாதோரின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கும் முகம் கொடுத்த போதும் மக்கள் சேவை என்ற வகையில் துணிந்து செயற்படும் திறனை இங்கு பெற்றுள்ளோம் .என்றும் கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் கட் சியால் பாதிக்கப் பட் ட போது தேர்தலில் பங்கெடுப்பதில்லை என்று முடிவு செய்தேன் , ஆனால் இந்த பயிற்சிகள் ஊக்குவிப்பதாக இருப்பதால் பலதையும் தட்டிக் கேட்கும் தைரியத்தை பெற்று ள்ளோம் அந்தவகையில் அரசியலில் இறங்கி சாதித்து காட்டுவேன் என்று நம்புகின்றேன்,. அத்துடன் பெண் வேட்பாளர்களின் வீதத்தை அதிகரிக்கும் வகையில் செயற்படவுள்ளோம் என்று தமது கருத்துக்களை பலரும் பகிர்ந்து கொண்டனர் .
இந் நிகழ்வில் ஆரம்பங்களில் சிறப்பு பேச்சாளராக பிரபல அரசியல் ஆய்வாளர்.நிலாந்தன் கலந்து கொண்டு பெண்களை அரசியலில் ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துக்களை வழங்கியதுடன் அரசியல் பங்களிப்பில் உள்ள சட்டங்கள் , அடிப்படை பிரச்சனைகள் , பெண்கள் பிரதிநிதி துவத்தின் அவசியம் , சவால்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் கொழும்பைச் சேர்ந்த சட்டவாளர் அபிராமி வன்னியசிங்கம் டிசில்வா வும் , ஊடகத் தொடர்பாடல் குறித்து எஸ்.கிஸோனும் , தலைமைத்துவம் குறித்து ந. சுகிர்தராஜ் ஜூம் , ஊடகப் பிரச்சாரம் குறித்து உமாச்சந்திரா பிரகாஷ் ஸும் , பரிந்துரை குறித்து சட் டத்தரணி ரஞ்சித் தும், தகவல் அறியும் உரிமை சட் டம் குறித்து சட் டத்தரணி ஐங்கரனும் , வளவாளர்களாக கலந்து கொண்டு வழிப்படுத்தியமை குறிப்பிடத் தக்கது.
யாழ்.தர்மினி பத்மநாதன்