சென்னையில் வீசும் காற்றில் விசம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள சென்னையின் வருடாந்த காற்று மாசு குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
பொதுவாக சென்னையில் மரங்கள், கடற்கரைக்கு அருகே இருக்கும் பகுதி போன்ற காரணங்களால் ஏனைய பகுதிகளைவிட காற்றின் தரநிலை சற்று சிறப்பாகவே இருக்கும்.
எனினும் 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்கும் கடந்த மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அடையாற்றிலும் காற்றின் தரநிலை மிக மோசமடைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது . மேலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வரும் 28 நிலையங்களிலும் சல்பர் டையாக்சைட், நைட்ரஜன் டையாக்சைட் ஆகியவற்றின் வருடாந்திர சராசரி மதிப்புகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் வெளியாகியுள்ள மணற்துகள்கள், வாகனப் புகை போன்றவற்றால் காற்றில் துகள்களின் விகிதமும் கணிசமாக உயர்ந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய காற்று தர கண்காணிப்பு திட்டத்தின் கீழ் சென்னையில் அடையார், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், நுங்கம்பாக்கம் ஆகிய ஐந்து பகுதிகளில் காற்றின் தரம் சோதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#சென்னை #காற்றில் #விசம் #மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்