இதுவரை வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக அதனை பெற்றுக் கொண்டு தங்கள் வாக்குரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தத்தமது கிராம அலுவலகர் ஊடாக அப் படிவத்தினை பெற்றுக் கொள்ளுமாறு யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பெறுவதில் சிக்கல்கள் உள்ளவர்கள் உடனடியாக முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த மே மாதம் 15ஆம் திகதியில் இருந்து ஜூன் மாதம் 14ஆம் திகதிவரைக்கும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கப்பட்டது. இருப்பினும் அப்படிவங்கள் உரிய முறையில் தம்மை வந்தடையவில்லை என்று சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அப் படிவத்தினை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது கிடைக்காதவர்கள் உடனடியாக தத்தமது கிராம அலுவலகரிடம் அப் படிவத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும்.
வாக்காளர் கணக்கொடுப் படிவம் பெற்றுக் கொள்வதில் பிரச்சினைகள் இருப்பின் யாழ்.மாவட்ட தேர்தல் அலுவலக தொலைபேசி இலக்கமான 0212222655 என்னும் இலக்கத்திற்கும், 0212228002 என்ற தொலை நகல் இரக்கத்திற்கும், யாழ்.மாவட்ட அரச அதிபரின் முறைப்பாட்டு இலக்கமான 0212225000 என்ற தெலைபேசி இலக்கத்திற்கும் தொர்பு கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.
கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் என்றும் உதவித் தேர்தல் ஆணையாளர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
#வாக்குரிமை #வாக்காளர் கணக்கெடுப்பு #அமல்ராஜ் #தேர்தல் ஆணையாளர்