கிளிநொச்சி முகமாலைப்பிரதேசத்தில் வெடிபொருள் அகற்றும் பணிகளை துரிதப்படுத்தி தமது காணிகளில் மீள்குடியேற அனுமதிக்குமாறு முகமாலைப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி போன்றபகுதிகளில் வெடிபொருள் அகற்றுவதில்; ஏற்படுகின்ற தாமதங்களால்இந்தப்பிரதேசங்களைச்சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த பத்தொன்பது வருடங்களாக வெளிமாவட்டஙகளிலும் உறவினர்; நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு வாழந்து வரும் தங்களை சொந்த நிலத்தில் குடியேற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். முகமாலை அம்பளாவளை, இத்தாவில் மேற்கு வேம்பொடுகேணி இந்திராபுரம் ஆகிய பிரதேசங்;கள் பகுதியளவில் வெடிபொருள் ஆபத்தான பகுதிகளாக காணப்படுகின்ற நிலையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை கடந்த மாதம் 25ம்திகதி இந்தப்பிரதேசங்களில் வெடிபொருள் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட ஒருபகுதியில் 49 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #முகமாலை #வெடிபொருட்கள் #மீள்குடியேற
சுப்ரமணியம் பாஸ்கரன்