புகையிரத பணியாளர்களின் போராட்டம் தொடர்கின்ற நிலையில் நாட்டின் 40 புகையிரத சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதேவேளை, சுமார் 40 புகையிரத சேவைகள் நாடளாவிய ரீதியில் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் யாழ்தேவி ரயில் சேவை மற்றும் 9 அலுவலக புகையிரத சேவைகள் இன்று காலை சேவையிலீடுபட்டதாக இலங்கை புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்தார். சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடருமென புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. #புகையிரதபணியாளர்கள் #போராட்டம் #சம்பளமுரண்பாடு
புகையிரத பணியாளர்களின் போராட்டம் 40 புகையிரத சேவைகள் இடை நிறுத்தம்..
170
Spread the love
previous post