ஆட்கடத்தல் தொடர்பான, அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையில் இம்முறையும் இலங்கையின் பெயர் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது ஆட்கடத்தல் விடயத்தில் இரண்டாம் அடுக்கு கண்காணிப்பு பட்டியலில் இலங்கை உள்ளடக்கக்கட்டு உள்ளதாகவும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளாத போதிலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது தற்போது சிறப்பாக செயற்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் ஆட்கடத்தல் விவகாரத்தில் உறுதியான நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டுமெனவும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. #ஆட்கடத்தல் #அமெரிக்கா #அமெரிக்கஇராஜாங்கத்திணைக்களம்
ஆட்கடத்தல் – அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையில், இலங்கையும் தொடர்கிறது…
142
Spread the love