அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தினை சுட்டு வீழ்த்தியதன் மூலம் ஈரான் மிகப்பெரிய தவறை இழைத்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், இதுமனித தவறுகளால் நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிவித்த அவர் ஈரான் இதனை வேண்டுமென்றே செய்திருக்கும் என தன்னால் நம்ப முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் தமது வான்வெளி எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தெரிவிக்கும் ஈரானின் குற்றச்சாட்டினையும் அமெரிக்கா மறுத்துள்ளது. இதேவேளை அமெரிக்கா, ஈரான் நாட்டு பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதாக குற்றம் சுமத்தியுள்ள ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவேத் ஸாரிப், அமெரிக்கா மீது ஐ.நா சபையில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
#us drone #ஈரான் #தவறை #ஆளில்லா விமானத்தினை #ஐ.நா