பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க ஆயிரம் நீதிமன்றங்களை அமைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அது தொடர்பாக ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்படுகின்றன. ஆசிட்வீச்சு, கடத்தல், பாலியல் குற்றங்கள் , கௌரவ கொலை போன்ற குற்றங்கள் அங்கு தொடர்ந்துர்ம் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க 1,016 நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா தெரிவித்துள்ளார். அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு நீதிமன்றம் இருக்கும் எனவும் பிற நீதிமன்றங்களை விட இது மாறுபட்டதாகும் எனவும் தெரிவித்த அவர் பெண்கள் இங்கு எந்தவித பயமுமின்றி முறைப்பாடுகளை வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
#பெண்களுக்கு #குற்றங்கள் #பாகிஸ்தான் #நீதிமன்றங்கள்