சுறா மீன் துடுப்புகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு கனடா தடை விதித்துள்ளது. இதனையடுத்து இந்த தடையை விதிக்கும் முதல் ஜி20 நாடு என்ற பெயரை கனடா பெற்றுள்ளது. இது அழிவின் விளிம்பில் இருக்கும் சுறா மீன்களை பாதுகாக்கும் முயற்சியாக கருதப்படுகிறது.
ஆசிய நாடுகளை தவிர்த்து சுறா துடுப்புகளை மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யும் நாடாக விளங்குகின்ற கனடாவில் 1994ஆம் ஆண்டிலிருந்து உள்ளூர் மீன் பிடிப்புகளில் சுறா மீன்களின் துடுப்புகளை எடுப்பது சட்டவிரோதமானதாக்கப்பட்டது.
சுறா மீன் துடுப்புகளின் விற்பனையானது உலகம் முழுவதும் பல சுறா மீன்வகைகள் அழிவதற்கு காரணமாக உள்ளது. மேலும் விற்கப்படும் துடுப்புகளில் மூன்றில் ஒரு பங்கு அழிவின் ஆபத்தில் இருக்கும் சுறா மீன்களின் துடுப்புகளே ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த துடுப்புகள் ஒரு சுறா மீன் உயிரோடு இருக்கும்போதே அதன் உடம்பில் இருந்து வெட்டி எடுக்கப்படும்.
இவ்வாறு உயிரோடு இருக்கும்போது எடுக்கப்படும் துடுப்புககளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டுக்குமே கனடாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சுமார் 73 மில்லியன் சுறாக்கள் துடுப்புகளுக்காக கொல்லப்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளமை குறிப்படத்தக்கது
சு .#சுறா மீன் #டுப்புகளின் #ஏற்றுமதி #இறக்குமதி #கனடா #தடை #canada#shark-fin