புகையிரத ஊழியர்கள் இரண்டு நாட்களாக முன்னெடுத்து வந்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் நேற்று 22ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது. அந்தவகையில் இந்நிலையில், இன்று அதிகாலை முதல் புகையிரதசேவைகளை வழமைபோன்று முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ஒவ்வொரு வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை அடையாளப் பணிப்பகிஸ்கரிப்பினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு புகையிரத சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் புகையிரத கண்காணிப்பு முகாமையாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#புகையிரத ஊழியர்களின் #பணிப்பகிஸ்கரிப்பு #போராட்டம் #நிறைவு