அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக மார்க் எஸ்பர் என்பவரை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவு செய்துள்ளார்.
வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு, ஈரான் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு திடீரென விலகியதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய நிலையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜிம் மட்டிஸ் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பதவிவிலரகியதனைத் அதைத் தொடர்ந்து அந்தப் பதவி வெற்றிடமாக காணப்பட்ட நிலையில் புதிய பாதுகாப்பு அமைச்சராக 55 வயதான மார்க் எஸ்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரது நியமனத்துக்கு பாராளுமன்ற செனட் சபை ஒப்புதல் வழங்க வேண்டும். செனட் சபையில் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் மார்க் எஸ்பர் நியமனத்துக்கு ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல் ஏதும் இருக்காது எனத் தெரிவிக்கப்படுகின்றது
#அமெரிக்க #பாதுகாப்பு அமைச்சராக #மார்க் எஸ்பர் #டொனால்ட் டிரம்ப்