மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை 12 ஆயிரத்து 21 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அங்கு தற்போது நடைபெற்று வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் மாநிலத்தில் 12 ஆயிரத்து 21 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் எனவும் இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 610 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட 12 ஆயிரத்து 21 விவசாயிகளில் 6,888 விவசாயிகள் இழப்பீடு பெற தகுதியானவர்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்’கு இழப்பீடாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.#மகாராஷ்டிரா #விவசாயிகள் #தற்கொலை #இழப்பீடு