எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக கட்சியின் தேசிய மாநாட்டின் போது நியமிக்க உள்ளதாக பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டு ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி சுகததாஸ உள்ள விளையாட்டரங்கில் இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கும் இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது அறிவிப்பார் எனவும் அவரிற்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #எதிர்கட்சிதலைவர் #மஹிந்தராஜபக்ஸ #ஶ்ரீலங்காபொதுஜனபெரமுன
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவே…
153
Spread the love
previous post