போர்முலா வன் கார்பந்தயப் போட்டியில் மெர்சிடிஸ் அணிக்காக விளையாடும் நடப்பு சம்பியனான இங்கிலாந்தின் லுயிஸ் ஹமில்டன் ( ( Lewis Hamilton) 25 புள்ளிகளை பெற்று இந்த காலப்பகுதியில் தனது 6-வது வெற்றியை பதிவுசெய்துள்ளார். இந்த ஆண்டுக்கான போர்முலா வன் கார்பந்தயப் போட்டி உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகின்ற நிலையில் அதன் 8-வது சுற்றான பிரெஞ்ச் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள லீ காஸ்ட்லெட் ஓடுதளத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 309.69 கிலோமீற்றர் கொண்ட பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் போட்டியிட்ட நிலையில் முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட லுயிஸ் ஹமில்டன் வெற்றி பெற்றுள்ளார்.
1 மணி 24 நிமிடம் 31.198 வினாடிகளில் முதலாவதாக வந்த ஹமில்டன் 25 புள்ளிகளை பெற்று இந்த காலப்பகுதியில் தனது 6-வது வெற்றியை பதிவுசெய்துள்ளார். அவரை விட 18.056 வினாடி மட்டுமே பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 2-வது இடத்தை பிடித்து அதற்குரிய 18 புள்ளிகளை பெற்றதுடன் பெராரி அணிக்காக போட்டியிடும் முன்னாள் சாம்பியனான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 5-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்ர்.
இதுவரை நடந்துள்ள 8 சுற்று முடிவில் ஹமில்டன் 187 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வால்டெரி போட்டாஸ் 151 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். அடுத்த சுற்று போட்டி எதிர்வரும் 30ம் திகதி ஒஸ்ரியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
#போர்முலா வன் கார்பந்தயப் போட்டி #ஹமில்டன் #வெற்றி #Lewis Hamilton