ஈரான் மீது அமெரிக்கா இணையத் தாக்குதலை நடத்தி அந்நாட்டின் ஆயுத கட்டுப்பாட்டு கணினிகளை செயலிழக்க செய்துள்ளது. ஈரானின் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் இரு நாடுகளிடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களது வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரான் மீது ராணுவ தாக்குதலுக்கு உத்தரவிட்டு, பின்னர் அதனை திரும்பப்பெற்றிருந்தார்.
இந்நிலையில் ஈரான் புரட்சிகர ஆயுதப்படையின் ஆயுத கட்டுப்பாட்டு கணிணிகள் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதனால் ஈரானின் ரொக்கெட் மற்றும் ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளின் கட்டுப்பாட்டு கணினிகள் பாதிக்கப்பட்டதாகவும் அவை மீண்டும் பயன்பாட்டுக்கு வர சில காலம் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி டிரம்பிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதற்காக வாரக்கணக்கில் திட்டமிட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஓமன் வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது கண்ணி வெடிதாக்குதல் நடத்தப்பட்டதற்கும், உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கும் பதிலடியாக ஈரான் மீது இந்த இணைய தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
#ஈரான் #அமெரிக்கா #இணைய தாக்குதல் #ஆயுத கட்டுப்பாட்டு #செயலிழப்பு #america #cyber attack #iran