ரிசர்வ் வங்கி துணை ஆளுனர்; விரால் ஆச்சாரியா தனது பதவிக்காலம் முடியும் முன்னரே இன்று திடீரென பதவிவிலகியுள்ளார். இந்தியாவில் வங்கிகளின் செயல்பாடுகள், பங்கு பரிவர்த்தனை வர்த்தகம், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அன்னிய செலாவணி நடமாட்டம் ஆகியவற்றை கண்காணித்து, புதிய ரூபாய் தாள்களை அச்சடிக்கும் பணிகளையும் செய்து வரும் மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனராக இருந்த விரால் ஆச்சாரியாவே இவ்வாறு இன்று பதவிவிலகியுள்ளார்.
2017-ம் ஆண்டில் இந்த பொறுப்பையேற்ற விரால் ஆச்சாரியாவின் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் அவரது இந்தப் பதவிவிலகல் குறித்து பல்வேறு விதமான கருத்துகள் முன்வைக்கப்படுகிறது. மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுனராக முன்னர் பதவி வகித்த உர்ஜித் பட்டேல் தனது பதவிக்காலத்தின்போதே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவிவிலகயிருந்தார்; என்பது குறிப்பிடத்தக்க
#ரிசர்வ் வங்கி #துணை ஆளுனர் #பதவிவிலகல்