ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரையில் நேற்றையதினம் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தின் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும், புதுச்சேரியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா, ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
எனினும் ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழக விளைநிலங்களை அழிப்பதுடன் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் எனத் தெரிவித்து அத்திட்டத்துக்குப் பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றையதினம் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை 596 கிலோ மீற்றருக்குப் மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலரும் பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்படத்தக்கது .#ஹட்ரோ கார்பன் திட்டம் #கைவிட #மனிதச் சங்கிலிப் போராட்டம்