காஞ்சிபுரம் கோவிலில் 100 கிலோ தங்கம் மோசடி வழக்கு தொடர்பில் தேடப்பட்டு வந்த கோவில் குருக்கள் மும்பை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலுக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்ட போது அதில் 100 கிலோவுக்கும் மேல் தங்கம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் கோவில் குருக்களான 87 வயதான ராஜப்பா தேடப்பட்டு வந்த நிலையில் அவர் கனடா நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார்.
இதைத்தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களுக்கும் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து காவல்துறையினர் கடிதம் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ராஜப்பா குருக்கள் நேற்று முன்தினம் கனடாவிலிருந்து மும்பைக்கு சென்ற போது விமான நிலைய காவல்துறையினர் அவரைக் கைது செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து நீதிபதி முன்னிலையில் அவர் முன்னிலைப்படுப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் யூலை 5ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதனையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் #மோசடி #தேடப்பட்டு வந்த #காஞ்சிபுரம் #கோவில் குருக்கள் #விமான நிலையத்தில் #கைது