கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை, இன்று (25.06.19) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த அறிக்கையானது, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர், பாராளுமன்றத்தின் கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டு கண்காணிப்பு குழுவிடமும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இந்த அறிக்கையை, சட்ட மா அதிபர் திணைக்களத்திடமும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில், அதை, அவசரகாலச் சட்டத்தின் பிரகாரம், அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென, அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #ஹிஸ்புல்லாஹ் #சட்ட மாஅதிபர்திணைக்களம் #மட்டக்களப்புபல்கலைக்கழகம்
மட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…
145
Spread the love