பிரதான செய்திகள் விளையாட்டு

பெண்கள் உலக கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ்  காலிறுதிக்கு முன்னேற்றம்

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 8-வது பெண்கள் உலக கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. 24 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது சுற்றுப் போட்டி ஒன்றில் கமரூன் அணியுடன் போட்டியிட்ட இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு போட்டியில் பிரான்ஸ்மற்றும் பிரேசில் அணிகள் போட்டியிட்ட நிலையில்; பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது

#உலக கிண்ண கால்பந்து போட்டி #இங்கிலாந்து #பிரான்ஸ்  #காலிறுதி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.