நெதர்லாந்து நாட்டில் நான்கு மணி நேரமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுக் காணப்பட்டுள்ளது. குறித்த ஒரு பகுதி என்றில்லாமல் பரவலாக நாடெங்கும் முற்றாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் நெதர்லாந்து பொதுத்துறை நிறுவனமான ரோயல் கேபிஎன் சேவை செயலிழந்ததாகவும் அதன் பின்னர் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் சேவையும் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை என்ற போதிலும் இணைய ஊடுருவல் இடம்பெற்றதாக தெரியவில்லை என அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதும், அதிகளவில் காவல்துறையினர் வீதிகளில் குவிக்கப்பட்டதுடன் அவசர தேவைக்கு தொலைத்தொடர்பை சார்ந்து இருக்காமல் நேரடியாக காவல் நிலையம், மருத்துவமனைக்கு செல்லுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது#நெதர்லாந்து #தொலைத்தொடர்பு #துண்டிப்பு