முகத்தை மூடாமல் மத ரீதியிலான ஆடைகளை அணிந்து அரச அலுவலகங்களுக்கு செல்ல முடியும் என அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த அரச அலுவலகங்களுக்கான சுற்றுநிருபத்தில்; பெண்கள் சேலையும் ஆண்கள் முழுமையான உடையும் அணிந்து செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பியிருந்ததனையடுத்து பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று புதிய அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இதில் முகத்தை மூடாமல் மத ரீதியிலான ஆடைகளை அணிந்து அலுவலகங்களுக்கு செல்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #முகத்தைமூடாமல் #மதரீதியிலானஆடைகள் #அமைச்சரவை #சுற்றுநிருபம் #ரஞ்சித் மத்தும பண்டார