150
போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனை உறுதிப்படுத்தி உள்ளார். ஏற்கனவே நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும், அதற்கான தினமொன்று தீர்மானிக்கப்பட்டு விட்டது எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். #போதைப்பொருள் கடத்தல் #மரணதண்டனை #மைத்திரிபாலசிறிசேன #குற்றவாளிகள்
Spread the love