மாணவர்கள் மத்தியில் இனம் ,மதம் சார்ந்த பிரிவினைகளை நீக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நிலை மாறு கால நீதி மற்றும் மதங்கள் ஊடாக நல்லிணக்கம் தொடர்பாக தெளிவூட்டும் விசேட நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் மன்ஃசித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மற்றும் மன்ஃஅல்ஹஸ்கார் தேசிய பாடசாலையிலும் இடம் பெற்றது.
தேசிய சமாதான பேரவை மற்றும் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அண்மைக் காலமாக நாட்டில் இடம் பெறும் முரண்பாடுகளின் மத்தியில் மாணவ சமுதாயம் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயற்படுவது தொடர்பாகவும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் மாணவர்களின் பங்களிப்பை எவ்வாறு முன்னேற்றுவிக்களாம் என்பது தொடர்பாக ஆசிரியர்களாலும் மாணவர் தலைவர்களாலும் விரிவுரைகள் வழங்கப்பட்டது.
அதே நேரத்தில் முரண்பாடான சமயங்களில் தீர்மானங்கள் எடுப்பதிலும் பண்மைத்துவம் சார்ந்த விடயங்களை எவ்வாறு கருத்தில் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் நடை முறை ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதற்கான செயற்பாடுகள் அடங்கிய சுவரொட்டிகளும் மாணவர்கள் மத்தியில் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #மாணவர்களுக்கான #நல்லிணக்க #விழிப்புணர்வு #இனம் #மதம்