தன்னுடைய பதவிவிலகும் முடிவில் மாற்றம் இல்லை எனவும் அந்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ராகுல் காந்தி பதவிவிலகும் முடிவினை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் பேரவை தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்த தமிழக காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை தொடர வேண்டும் என வலியுறுத்தினர்.
இதரன் போது உரையாற்றிய ராகுல் காந்தி, தான் தற்போது தலைவர் பொறுப்பில் இல்லை எனவும் தன்னுடைய பதவிவிலகும் முடிவில் மாற்றம் இல்லை எனவும் அந்த முடிவில் இருந்து பின்வாங்கவும் மாட்டேன் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார். #பதவிவிலகும் #மாற்றம் இல்லை #ராகுல்காந்தி